டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-25 23:56 GMT

திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பரவவிடாமல் தடுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஒன்றிணைந்து தினந்தோறும் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல், தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல் போன்ற பணிகள் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையிலும் துணை சேர்மன் ஆதவன் அதியமான் முன்னிலையிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் திருமங்கலம் நகரில் பொதுமக்களுக்கு டெங்கு பரவவிடாமல் தடுத்திடும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கிடும் முகாம்கள் நகரின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும். கழிவுநீர் கால்வாயில் கொசுமருந்து தெளிக்கவும் நகரில் முக்கிய இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் போடவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாதம் ஒருமுறை 4 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் இதில் பொதுமக்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேலு, கவுன்சிலர்கள் வீரக்குமார், திருக்குமார், சின்னச்சாமி, சுகாதாரத் துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்