தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-09-13 19:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கங்காதரன்(வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி காலை ஆலம்பாடி காலனி தெருவில் சுப்ரமணி என்பவரின் வீட்டில் சென்ட்ரிங் பலகைகளை பிரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கங்காதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்