கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலி
ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியானார்.
ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்பு (வயது 46), கட்டி தொழிலாளி. இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அப்பு விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்ததும் இவரது தாய் பாஞ்சாலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்க முயன்றார். ஆனால் 50 அடி ஆழ கிணற்றில் நீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி அப்புவை பிணமாக மீட்டனர். அப்புவின் தாயார் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.