தரைப்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

காளிகாபுரம்-தேவனாங்குளம் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-13 12:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் கமண்டல நதியின் குறுக்கே காளிகாபுரம்-தேவனாங்குளம் செல்லும் சாலையில் இருந்த தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது இடிந்து விழுந்தது.

தொடர்ந்து அப்போதை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வம், புதிய தரைப்பாலம் ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பில் கட்டப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் தேவனாங்குளம், காளிகாபுரம், லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சேதமான பாலம் வழியாக தான் நடந்து சென்று வருகின்றனர். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கேசவபுரம், சாமந்திபுரம் வழியாக சென்று வரவேண்டும். எனவே புதிய பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்