கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி
கடையநல்லூர் நகராட்சியில் ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மணிக்கூண்டு அருகே சேர்ந்தமரம் நெடுஞ்சாலை, புதுத்தெரு, பெரிய தெரு, அட்டை குளம் தெரு, மசூதைக்கா பள்ளிக்கூடம் தெற்குதெரு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் சிறு பாலங்கள் ஒரே நேரத்தில் சேதமடைந்ததால் அருகில் உள்ள அரசு உதவி பெறும் மசூதைக்கா மேல்நிலை பள்ளிக்கூடத்திற்குள் மழை நீர், சாக்கடை நீர் சென்றது. உடனடியாக நகராட்சி சார்பில் சேர்ந்தமரம் சாலையில் இருந்து சீவலான் கால்வாய் வரை 150 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் ஓடை மற்றும் மேல்மூடி, 5 சிறு சிறு பாலங்கள் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு செய்து வேலையை விரைந்து முடிக்க அரசு ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.