பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சாத்தான்குளம் யூனியன் தச்சன்விளையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியன் அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தச்சன்விளையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை சாத்தான்குளம் யூனியன் துணைத் தலைவர் அப்பாத்துரை தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து துணைத் தலைவர் முருகேஸ்வரி, அ.தி.மு.க. கிளை செயலர்கள் ஜெயம், ராஜலிங்கம், அரசு ஒப்பந்தகாரர் நாஞ்சில் மற்றும் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.