நகராட்சி பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
நகராட்சி பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட இஷாக்பேட்டை 1-வது தெரு மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி நகரமன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முஹம்மத் அமீன் தொடங்கி வைத்தார்.
இதில் நகரமன்ற துணைத்தலைவர் குல்சார் அஹமது, நகராட்சி பொறியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.