ரூ.65 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.65 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2023-10-01 19:00 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா கொடியங்குளம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொடியங்குளம் முதல் என்.புதூர் வரை ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், மண்டல துணை தாசில்தார் திருமலை ஸ்டாலின், யூனியன் பணிமேற்பார்வையாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் செல்வரேகா, கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், பஞ்சாயத்து துணை தலைவர் கவுதம், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார். இதில் ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி தலைமையில் டாக்டர்கள் அன்புமாலதி, ஜீவராஜ் பாண்டியன் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்