புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி

மூங்கில்துறைப்பட்டு, மேல் சிறுவள்ளூரில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-27 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு:

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மூங்கில்துறைப்பட்டு, மேல்சிறுவள்ளூரில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பணி நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அஸ்வினிசெந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், சங்கராபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலைகோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் மேல்சிறுவள்ளூரிலும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய்ஆனந்த், நிர்வாகிகள் சவுந்தர், கலை, துரைவேலன், ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்