புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவு - ரெயில்வே அமைச்சகம் தகவல்
புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரத்தில் உள்ள பழமை வாய்ந்த பாம்பன் பாலம், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றவாறு அதன் நடுப்பகுதியில் கத்திரி வடிவ தூக்கு பாலமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதால், ரூ.535 கோடி செலவில் நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய ரெயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.