புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம்

ஆலங்குளம் அருகே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2023-09-11 19:32 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

மழைநீர் செல்ல ஓடை

வெம்பகோட்டை தாலுகா கன்னிதேவன்பட்டி-கோபாலபுரம் கிராமங்களுக்கு இடையில் மழைநீர் செல்வதற்காக ஓடை உள்ளது. இந்த வழியாக சிவலிங்காபுரம், நரிக்குளம், வடகரை, தென்கரை, கோபாலபுரம், கீழ ராஜகுலராமன், கன்னிதேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த ஓடையில் பாலம் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் இந்த வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீரில் வாகனங்களில் சிக்கி தவிக்கும் நிலையும் தொடர்கிறது.

பாலம் கட்டும் பணி

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கன்னிதேவன்பட்டி-கோபாலபுரம் சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்காக ஓடை உள்ளது.

இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ேபாக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலையும் உள்ளது. ஆதலால் இந்த பகுதியில் பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பாலம் கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்தால் எண்ணற்ற கிராம மக்கள் இந்த வழியாக எளிதில் சென்று வருவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்