சுந்தர விநாயகருக்கு புதிய கோவில் கட்டும் பணி

மயிலம் கொல்லியங்குணத்தில் சுந்தர விநாயகருக்கு புதிய கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-07 18:45 GMT

மயிலம்:

மயிலம் கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகில் பழமைவாய்ந்த 6½ அடி உயரம் கொண்ட சுந்தர விநாயகர் சிலையுடன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞானபாலய சுவாமிகள் ஆலோசனையின்படி பல லட்சம் ரூபாய் செலவில் புதிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே திருப்பணிகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், யாகசாலை அமையும் இடம், கோவில் சுற்றுச்சுவர் அமைப்பது, வண்ணம் பூசுவது, கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார் அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி வர்ணமுத்து, ஊர் நாட்டாமைகள், கிராம மக்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்