சென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழு - அமைச்சர் சேகர் பாபு

சென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சட்டமன்ற தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-06 04:47 GMT

சென்னை,

சென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சட்டமன்ற தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை, திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, சட்டமன்ற வாரியாக வாட்ஸ் அப் குழுவிலே முக்கிய அதிகாரிகள் இணைக்கப்படுவார்கள். குறைகள் எதுவாக இருந்தாலும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் அதிலே பகிர்ந்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து அந்த குறைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் குறித்து அந்த குழுவில் பதிலளிக்கப்படும்.

இந்தக் குழுவில் மேயர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைகின்றார்கள். மக்களுடைய கோரிக்கைகள், குறைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக களைவதற்கு இது ஒரு சிறப்பான வழியாக இருக்கும் என்று இந்த குழுவை தொடங்க சொல்லியிருக்கிறோம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்