ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்

7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

Update: 2022-11-09 19:44 GMT

7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல்

7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

வரைவு வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்து 744 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 74 ஆயிரத்து 860, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 653. மூன்றாம் பாலினத்தவர் 231. கடந்த 5.1.2022 முதல் 20.10.2022 வரை நடைபெற்ற தொடர் வாக்காளர் மேம்படுத்தலில் புதிதாக 7ஆயிரத்து 3 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடம் பெயர்ந்த வாக்காளர்கள் 34,322. இறந்த வாக்காளர்கள் 36,735, இரட்டை பதிவுகள் 7, 688 ஆக மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 745 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு சுருக்க திருத்தம்

சிறப்பு சுருக்க திருத்தம் 1.1.2023, 1.4.2023, 1.7.2023, 1.10. 2023 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களை கொண்டு நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ல் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 8-11-2022 முதல் 8-12-2022 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட மையங்கள், வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பெறப்படும்.

விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் 1.1. 2023 அன்றோ அல்லது அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 1.4.2023, 1.7.2023 மற்றும் 1.10.2023 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களில் 18 வயது பூர்த்தி செய்யும் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிதாக பெயர்களை சேர்க்க விரும்பும் நபர்கள், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இறுதி பட்டியல்

சிறப்பு சுருக்கத்தின் போது பெறப்பட்ட விண்ணப்பங்களின் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களின் படிவங்கள் மற்றும் பெயர் நீக்கம் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் முடிவு செய்யப்பட்டு 5.1.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேலும் 1.4.2023, 1.7.2023 மற்றும் 1.10.2023 ஆகிய அடுத்தடுத்த தகுதி பெறும் நாட்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காலாண்டுகளில் முடிவு செய்யப்பட்டு காலாண்டின் தொடக்கத்தில் துணைப் பட்டியலாக வெளியிடப்படும். எனவே 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் மற்றும் 17 வயது நிறைவடைந்தவர்கள் முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்