5 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு

Update: 2023-06-12 19:30 GMT

பென்னாகரம்:-

பென்னாகரம் கடைவீதி பகுதியில் தனியார் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது பூட்டு மற்றும் ஷட்டர் உடைந்த நிலையில் காணப்பட்டது. இதை கண்ட, கடை உரிமையாளர் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். கடையில் சுமார் ரூ.15 ஆயிரம் திருடி சென்றதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவில் உண்டியல் மற்றும் அருகில் உள்ள ஒரு வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் தெரிய வருகிறது. மொத்தம் 5 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இந்த தொடர் திருட்டு தொடர்பாக பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பென்னாகரம் நகர் பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 5 இடங்களில் திருட்டு சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்