ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-06-08 20:03 GMT

விக்கிரமசிங்கபுரம்:

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சிவந்திபுரத்தில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் குணமடைய வேண்டியும் பிரார்த்தனை நடத்தினர். அம்பை தெற்கு வட்டாரம் சிவந்திபுரம், அடையகருங்குளம் கிராம காங்கிரஸ் கமிட்டி இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டார தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். சிவந்திபுரம் தலைவர் நெல்சன், அடையகருங்குளம் தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்