காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்
முத்தையாபுரத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல தலைவர் ராஜன், தூத்துக்குடி மாநகர துணைத்தலைவர் முடிசூடி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி மாவட்ட தலைவர் அப்துல் மஜீத் வரவேற்று பேசினார். காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், முள்ளக்காடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முனியதங்கம், ஐ.என்.டி.யூ.சி.யை சேர்ந்த ராமசாமி, சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஞானதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.