காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டம்

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-26 17:32 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரை கண்டித்தும் வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்