ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-10-06 23:29 GMT

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ஆர்.விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம்.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து கேவலப்படுத்தும் பா.ஜனதா மோடி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் எம்.ஜவஹர் அலி, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முகமது அர்சத், நிர்வாகிகள் ஜூபைர் அகமது, விஜய்கண்ணா, அம்மன் மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்