எழுமலையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எழுமலையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-17 19:50 GMT

உசிலம்பட்டி,

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சியை கண்டிதும் எழுமலை நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எழுமலை நகர் காங்கிரஸ் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வக்கீல் ரமேஷ் வரவேற்றார்.

சேடப்பட்டி வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ், வேல்முருகன், நகர் செயலாளர் வாசிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன், பி.சி.சி. மெம்பர் சரவணகுமார், தெற்கு மாவட்ட மகளிர் தலைவி பிரவீனா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்