காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-04-21 01:21 IST

விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 67 பேரை கைது செய்து அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை பறித்த மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து கள்ளக்குறிச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, நகர மன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர தலைவர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் இளவரசன், வீரமுத்து, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மீனவர் காங்கிரஸ் மாநில நிர்வாகி ராஜி, மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், இதயத்துல்லா, வட்டாரத் தலைவர்கள் அசோக், தனபால், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மகளிர் அணி நிர்வாகிகள் பவுனாம்பாள், ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்