காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய அரசு தலைமை மருத்துவமனை சாலையில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு தலைமை தாங்கினார். மாநகர தலைவர் வெங்கடேஷ்வரன், மாவட்ட சேவாதளம் தலைவர் தாந்தோணி குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். எல்.ஐ.சி.யில், பி.எப். மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தியும், முதலீட்டாளர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.