காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நிலக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-06 19:00 GMT

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியார் சிலை அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் பரமசிவம், உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணை தலைவர் ரகுமான், கவுன்சிலர் பாரதி, மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முகமதுமீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரசூல் முகைதீன், சி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் ஆட்சியை நினைத்து ஒப்பாரி வைத்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில் வட்டார தலைவர்கள் சி.வி.கே.கோகுல்நாத், காமாட்சி, செல்வராஜ், சிதம்பரம், பழனியப்பன், ராஜ்கபூர் மற்றும் நகர தலைவர்கள் நடராஜன், முகமது அலி சித்திக், இக்பால், கனகராஜ், பரீத்கான், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், வரதராஜன், சுமதி, முருகேஸ்வரி, தியாகி ராமு ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்