காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
சுதந்திர தின விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். நகர தலைவர் எழிலரசன் வரவேற்றார்.வட்டார தலைவர்கள் வேணுகோபால், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பாதயாத்திரை மணக்குடியில் தொடங்கி காடந்தேத்தி, தலைஞாயிறு கடைத்தெரு, சின்ன கடைதெரு, வாட்டாகுடி, ஓரடியம்புலம், உம்பளச்சேரி உள்ளிட்ட 13 கிலோமீட்டர் தூரம் உள்ள உம்பளச்சேரிக்கு சென்றனர். இதில் முன்னாள் வட்டார தலைவர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி நடேசன், முன்னாள் நகர தலைவர் வீரமணி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.