காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு
காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தலின்படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய வட்டார, நகர தலைவர்களை தேர்வு செய்து மாவட்ட தலைவர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரியலூர் நகர தலைவராக எம்.சிவக்குமார், ஜெயங்கொண்டம் நகர தலைவராக அறிவழகன், உடையார்பாளையம் பேரூர் தலைவராக அக்பர் அலி, வரதராஜன்பேட்டை பேரூர் தலைவராக ஆரோக்கியசாமி, ஆண்டிமடம் வடக்கு வட்டாரத் தலைவராக சாமிநாதன், தெற்கு வட்டாரத் தலைவராக வேல்முருகன், ஜெயங்கொண்டம் வடக்கு வட்டாரத் தலைவராக சக்திவேல், தெற்கு வட்டாரத் தலைவராக கண்ணன், தா.பழூர் கிழக்கு வட்டாரத் தலைவராக சரவணன், மேற்கு வட்டாரத் தலைவராக அழகானந்தம், அரியலூர் வடக்கு வட்டாரத் தலைவராக கர்ணன், தெற்கு வட்டாரத் தலைவராக பாலகிருஷ்ணன், திருமானூர் கிழக்கு வட்டாரத் தலைவராக கங்காதுரை, மேற்கு வட்டாரத் தலைவராக திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.