காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 18:52 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் டி.மலர் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஏ.கே.டி.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கேசவன், மாவட்ட பொதுச் செயலாளர் என்.நந்தகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்தை கண்டித்து ேபசினார்.

அதில் மாவட்ட பொதுச்செயலாளர் பியாரேஜான், ஆற்காடு ஒன்றிய தலைவர் வீரப்பா, விஷாரம் நகர தலைவர் அப்துல் சுக்கூர், மாவட்ட துணைத் தலைவர்கள் விஷாரம் அமானுல்லா, பாகவி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் முஜீப், கலவை நகர தலைவர் விநாயகம், விளாம்பாக்கம் நகர தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்