காங்கிரசார் பாதயாத்திரை

காங்கிரசார் பாதயாத்திரை நடந்தது.;

Update:2022-08-12 20:53 IST

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 கிலோ மீட்டர் பாதை யாத்திரை மாவட்ட தலைவர் பி.எஸ்.ஜெய்கணேஷ் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது. பா.ஜ.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த பாதையாத்திரை சின்னசேலத்தில் முடிவடைந்தது. இதில் சின்னசேலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் இளையராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வீரமுத்து, சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்