தெற்கு மாவட்ட தலைவர் மீது போலீஸ் கமிஷனரிடம் காங்கிரசார் புகார்
தெற்கு மாவட்ட தலைவர் மீது போலீஸ் கமிஷனரிடம் காங்கிரசார் புகார் கொடுத்துள்ளனர்.;
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜவகர் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முன்னறிவிப்பு எதுவும் இன்றி, நிர்வாகிகளிடம் மனு வாங்காமல் புதிதாக நியமனம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதை, சித்தரித்து சம்பவ இடத்தில் இல்லாத தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், போலீசாரிடம் கொடுத்த பொய் புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே பொய் புகார் கொடுத்த கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.