மகளிர் குழுவினர் இடையே மோதல்
நாட்டறம்பள்ளி அருகே மகளிர் குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பொற்கொடி. மகளிர் குழு தலைவியாக செயல்பட்டு வருகிறார். இவரது குழுவில் சங்கீதா என்பவர் தனது உறவினர் நிவேதா என்பவருக்கு கடன் பெற்று கொடுத்து உள்ளார். இது தொடர்பாக மகளிர் குழு தலைவி பொற்கொடி மற்றும் 4 உறுப்பினர்கள் சங்கீதாவிடம் நிலுவைத் தொகையை கேட்டபோது தகராறு ஏற்பட்டுஇரு தரப்பினரும் கையால் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து பொற்கொடி மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சங்கீதா கொடுத்த புகாரில் 5 பேர் மீதும், பொற்கொடி கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.