இருதரப்பினருக்கு இடையே மோதல்; 4 பேர் கைது
பெரியகுளம் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ௪பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 32). இவரது அண்ணன் ராஜாராம். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இருவருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ராதிகாவின் மகள் பிரியதர்ஷினி ராஜாராம் வீட்டுக்கு சென்றார். அப்போது பிரிதர்ஷினியை ராஜாராமின் மனைவி சிவசங்கரி (28) தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். இதை தட்டி கேட்க சென்ற ராதிகா, அவரது உறவினர்கள் சுசீலா, தொந்தி ஆகியோருக்கும், சிவசங்கரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராதிகா கொடுத்த புகாரின்பேரில், பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரியை கைது செய்தனர். அதேபோன்று சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் ராதிகா, அவரது உறவினர்கள் சுசீலா (58) தொந்தி (64) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.