பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே மோதல்

பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது

Update: 2022-06-04 19:11 GMT

திருச்சி, ஜூன்.5-

திருச்சி பொன்னகர் 2-வது தெருவில் நேற்று பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் கட்சியினர் அந்த பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் நட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதன்பின் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொடிக்கம்பம் நட்டது தொடர்பாக போலீசார் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்