இலங்கைக்கு கடத்த இருந்த ஆடைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசாரும் இணைந்து அங்கு விரைந்து சென்றனர். தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் கடற்கரை பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மீன்பிடிபடகில் ஏற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட பார்சல் ஒன்றை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த பார்சலில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் பேண்ட், டீ சர்ட், நைட்டி குழந்தைகளுக்கான டிரஸ் உள்ளிட்ட பலவிதமான ஆடைகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த ஆடைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த ராமேசுவரம் வடக்கு தெருவை சேர்ந்த எஸ்ரா(வயது 24), அக்காள் மடம் பகுதியை சேர்ந்த ஜெரோன்(37), ரக்சித்ராஜ்(38), தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நாகூர்கனி(44), சூசையப்பர்பட்டினம் இருதயராஜ்(32) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை, பீடி பண்டல் மஞ்சள், கடல் அட்டை பலவிதமான போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த பலவிதமான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்