பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அருகே பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-18 18:45 GMT

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே வீடூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் உணவுப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு மற்றும் போலீசார், வீடூர் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீடூர் ஆனந்தம்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 46) என்பவர் அவரது வீட்டு திண்ணையில் 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், வாத்துகளை வளர்த்து வருவதும், அதற்கு தவிடுடன் கலந்து தீவனமாக வழங்குவதற்காக வீடூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்