மணிப்பூரில் நடந்த பெண்கள் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடந்த பெண்கள் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-27 18:45 GMT

தூத்துக்குடி

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பெண்களை பாலியல் வன்முறை செய்த மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர் அணி தலைவர் மாறன், மனித உரிமை துறை தலைவர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட துணை தலைவர் கார்த்திக் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

உடன்குடி

திருச்செந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் உடன்குடி மெயின் பஜாரில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவர்கள் நல்லக்கண்ணு, புங்கன், கோதண்டராமன், பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஜெயசீலன், தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யு.சி நிர்வாகி சந்திரன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்