திருப்பூர் சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு

கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2022-09-19 20:30 GMT

ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் டி.ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மகளிர் கோர்ட்டு அரசு வக்கீல் ஜமீலா பானு. அவரது அலுவலகத்தில் வைத்து அவரையும், அவருடைய மகள் ஆகியோர் மீது, பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறை உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த சம்பவத்தை கண்டித்தும் 20-ந் தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் ஈரோடு வக்கீல்கள் கோர்ட்டு பணிகளிலிருந்து விலகியிருந்து புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்