மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மாந்தநேய உணர்வாளர்கள் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கார்த்தி கமாலியேல் தலைமை தாங்கினார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் மெரினா பிரபு வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க பொறுப்பாளர் சுந்தரி மைந்தன், வக்கீல் அதிசயகுமார், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் முகமது கனி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட தலைவர் அருட்செல்வி, இஸ்லாமிக் பெடரேசன் ஆப் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் மகேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்