எழுமலை பேரூராட்சியை கண்டித்துஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
எழுமலை பேரூராட்சியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே எழுமலை முத்தாலம்மன் கோவில் அருகில் எழுமலை பேரூராட்சியின் நிர்வாக முறைகேடு, வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ப்ளான் அப்ரூவல் முறைகேடு, பத்திரப்பதிவு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வுமான அய்யப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜமோகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்தி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவா, பெருமாள், ஜெயக்குமார், காசிநாதன், ஜான்சன், அய்யர் என்ற ராமகிருஷ்ணன், கோஸ்மீன், சசிக்குமார், கார்த்திகேயன், குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.