வெங்கரை காளியம்மன் கோவில் விழா தொடர்பாகதாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

Update:2023-09-02 00:30 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா வெங்கரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வெங்கரை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவில் திருவிழா, வழிபாட்டு நிகழ்ச்சிகள் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்ககோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். அதன்பேரில் இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நேற்று பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இருதரப்பினரிடையே சுமுக தீர்வு ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் வருகிற 7-ந் தேதி நடைபெறும் என தாசில்தார் கலைச்செல்வி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்