எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றம் - சுற்றுச்சூழல் துறை செயலாளர் தகவல்

மீனவ மக்களும் இணைந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2023-12-21 21:26 GMT

சென்னை,

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது சென்னை எண்ணூரில் தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகத் தாழ்வான பகுதிகளில் படிந்தது. இந்த எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிக்காக நவீன ஸ்கிம்மர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மீனவ மக்களும் இணைந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இந்த பணியில் 128 படகுகள், 7 ஜே.சி.பி., 2 டிராக்டர்கள், 6 பொக்லைன் இயந்திரங்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், மொத்தம் 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்