நிலத்திற்கு பணம் கொடுத்தும் பத்திரப்பதிவு செய்துதரவில்லை என புகார்

நிலத்திற்கு பணம் கொடுத்தும் பத்திரப்பதிவு செய்துதரவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 18:45 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் கோதுங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டம்-திருச்சி சாலையில் வசித்து வரும் அருண்குமார் என்பவர் கோதுங்கநல்லூர் கிராமத்தில் அவருக்கு சொந்தமான இடத்தை தெற்கு, வடக்கு பகுதியில் மூன்று வீதிகளாக சுமார் 50 மனைகளாக பிரித்தார். இதில் ஒரு சென்டின் விலை ரூ.16 ஆயிரம் என்று பேசி பலர், அருண்குமாரிடம் கடந்த 2017-ம் ஆண்டு முன்பணம் கொடுத்தோம்.6 மாதத்திற்குள் கொடுத்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மீதி பணத்தை தயார் செய்து கொண்டு அருண்குமாரிடம் கேட்டபோது நிலமானது தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தார். ஆனால் இதுநாள் வரை நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இடையில் வேறு ஒருவருக்கு இடத்தை விற்பனை செய்து விட்டார். எங்களிடம் வாங்கிய முன்பண தொகையும் திருப்பி தரவில்லை எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்