புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-28 18:45 GMT

பொதுமக்களுக்கு இடையூறு

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துகிறது. வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை அகற்ற வேண்டும்.

பாலா, எஸ்.புதூர்.

கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்க உள்ள சூழலில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரங்களால் கண்மாயில் மழைநீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயை தூர்வாரி மழைநீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், சிவகங்கை.

சாலை ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் கடை, அலுவலகம் நடத்தி வருபவர்களும் சாலையில் ஏற்பட்டுள்ள வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடைவிதிக்க வேண்டும்.

சுதர்சனம், காளையார்கோவில்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பெரியகடை வீதி பஸ் நிலையம் முதல் நான்கு ரோடு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள், பாதசாரிகள் பயணிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாபர் அலி, சிங்கம்புணரி.

மைதானத்தில் சுற்றும் கால்நடைகள்

சிவகங்கை 48-வது காலனி சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் விளையாடும் மைதானத்தில் நாய்கள், காளைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் மாணவர்கள் அச்ச உணர்வுடனே மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்கின்றனர். மேலும் பள்ளி மைதானத்தில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, சிவகங்கை. 

Tags:    

மேலும் செய்திகள்