புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-31 17:39 GMT

சாலை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் ஊராட்சி சேர்ந்த அய்யனார்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சாலையில் நடக்க முடியாமல் அவதி படுகின்றன. வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கமுதி.

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சி குதிரை மொழி கிராமத்தில் இருந்து ஐந்து ஏக்கர் பனை தொழிலாளர்கள் குடியிருப்பு செல்லும் சாலையின் இருபுறமும் கருவேர மரங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் செல்ல முடியாத வகையில் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமிர்தபாண்டியன், ராமநாதபுரம்.

வாகன ஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேர்வுநிலை பேரூராட்சி சாலையில் சில இடத்தில் குப்பையை கொட்டி நெருப்பிடுகின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தினால் வாகனஓட்டிகள் பெருமளவில் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? .

ராஜா, கமுதி.

ஆக்கிரமிப்புகள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆர்ச் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.

கழிப்பறை வசதி தேவை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.


Tags:    

மேலும் செய்திகள்