'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-05 17:31 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா செட்டிய மூலை தென்பாதி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் உடைந்து விட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வரக்கூடிய சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், செட்டிய மூலை தென்பாதி.

தார் சாலை வேண்டும்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தருசுவேலி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

-பாரதி, தருசுவேலி.

Tags:    

மேலும் செய்திகள்