எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்..!

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி புகாரளித்துள்ளார்.

Update: 2022-06-24 11:37 GMT

சென்னை,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் எஸ்.கே.சாமி புகாரளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமையை பிடிக்க கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தனது புகாரை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை அலுவலரை நியமித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, டிஜிபி, ஆவடி காவல்துறை ஆணையர், ஆவடி துணை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்