தேசிய அளவிலான அறிவியல் புத்தாக்க விருதுக்கான போட்டி: அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
தேசிய அளவிலான அறிவியல் புத்தாக்க விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.;
அறிவியல் புத்தாக்க மாணவர் விருதுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இணைய வழியில் நடைபெற்றது. இதில் மாநில அளவிலான கண்காட்சி போட்டியில் 37 மாவட்டங்களில் இருந்து 1,596 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அஜய், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியிருந்தார். இதைத்தொடர்ந்து நடந்த போட்டியில் 15 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து தேர்வான 4 மாணவர்களில் அரியலூரை சேர்ந்த அஜய் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.