கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில்ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி

Update:2023-07-23 01:15 IST

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நடந்தது.

ஆரோக்கிய குழந்தைகள்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பேசுகையில், குழந்தைகளில் முதல் 1,000 நாட்களில் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டியானது நடத்தப்படுகிறது. மேலும், பிறந்த நாள் முதல் 6 வயது வரை அங்கன்வாடியில் கிடைக்கும் அனைத்து சேவைகளை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் பேணுதல் குறித்த எந்த அளவிற்கு தெரிந்துள்ளார்கள் என்பதை அறியும் வண்ணம் இப்போட்டியானது நடத்தப்பட்டு ஆரோக்கிய குழந்தைகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பரிசு

இந்த போட்டியில் 1 வயது முதல் 3 வயது வரையிலான 41 குழந்தைகள் கலந்து கொண்டனர். திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திலகாவின் 1½ வயது குழந்தைக்கு முதல் பரிசும், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த பவித்ரா சரத்குமாரின் 1½ வயது குழந்தை ஏஷிதாவிற்கு 2-ம் பரிசும், வேப்பனப்பள்ளி பவானியின் 10 மாத குழந்தை தனுஜாவிற்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்