திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன் புத்தகங்களை பரிசளித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, சிகரம் தொடுவோம் அமைப்பின் தலைவர் அந்திவயல் ராதா, 100 நாள் வேலைத்திட்ட களப்பணியாளர் சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.