கலைத்திருவிழா போட்டி

கலைத்திருவிழா போட்டி நடந்தது.

Update: 2022-11-30 18:45 GMT

எஸ்.புதூர், 

அரசு பள்ளி மாணவர்களுக்கான எஸ்.புதூர் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கட்டுகுடிப்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் கட்டுகுடிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர்கள் தன்னாயிரமூர்த்தி, ஜெயமீனா ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். ஏற்கனவே பள்ளி அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் மொழித்திறன், நடனம், நாடகம், கருவியிசை, கவின்கலை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள 420 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வட்டார அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கிறிஸ்டோபர், கணேசன், ஜெயலெட்சுமி ஆகியோர் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்