150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அ.பாண்டலத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
சங்கராபுரம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் சமுதாய கூட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்திநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பகால பராமரிப்பு, ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு, தாய்பாலின் நன்மைகள் பற்றியும் ஆலோசனை வழங்கினர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி, மேற்பார்வையாளர்கள் சித்ரா, ரமணி, சரஸ்வதி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.