இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்மறியல் போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
வாய்மேடு:
விலைவாசி உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் தபால் நிலைய முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கர்நாடகாவிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாதர் சங்க நிர்வாகிகள் ஜூடி, மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
வாய்மேடு
தகட்டூர் தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலகுரு, மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயா மற்றும் நிர்வாகிகள், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சிக்கல்
இதேபோல கீழ்வேளூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.